பூகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டாவல பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பூகொட முகாமின் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ரந்தவான பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 17.85 லீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இவர் மேலதிக விசாரணைகளுக்காக பூகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.