ஒளடத அதிகாரிக்கு கட்டாய விடுமுறை

12 0

தேசிய  மருந்துகள் ஒழுங்குப்படுத்தல்  அதிகாரசபையின் மருந்து மதிப்பீட்டு அதிகாரி  துஷார ரணதேவ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேசிய  மருந்துகள் ஒழுங்குப்படுத்தல்  அதிகாரசபையால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். இவர், மருந்தாளுனர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் இரகசிய தகவல்கள் வெளி நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாக அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் தேசிய  மருந்துகள் ஒழுங்குப்படுத்தல்  அதிகாரசபையின் தலைவர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரமவினால், அவர், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

மருந்து மதிப்பீட்டு அதிகாரி  துஷார ரணதேவ பயன்படுத்திய அனைத்துப் பொருட்களையும் ஒப்படைக்க வேண்டும் எனவும், எந்தவொரு விடயத்திற்காகவும்  தனது அனுமதியுடன் தான் நிறுவன வளாகத்திற்கு வர முடியும் எனவும்  கட்டாய விடுப்பை கையளித்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், துஷார ரணதேவவின் தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசியையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.