“உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்போம்”

21 0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்பதோடு, தொடர்ந்தும் சர்வதேச விசா ரணையை வலியுறுத்துகின்றோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் சனிக் கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட் டோரின் உறவினர்களின் சங்கத்தினரால் ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட் டது. அவ்வறிக்கையில்,

“நாம் ஒரு தேசிய இனம். ஆனால் தொன்று தொட்டு சிறுபான்மையினம் என்ற பதத் துக்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டுள்ளது எம். தமிழினம். இன்றும் தமது பிள்ளைகளையும், கணவன்மார்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பரம்பரையில் முதல் வரி சையில், மனம் தளர்ந்து வெந்து கொண்டி ருக்கும் உறவுகளாக, வடக்கு/கிழக்கில் ஏங் கிக்கொண்டிருக்கும் தமிழினமாக வாழ்ந்து வருகின்றோம்.

 

இன்று எமது எட்டு மாவட்டத்திலுமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எண்ணிக்கை 18,817 பேர் ஆவர். அதுமட்டு மல்லாமல், 2009இல் முள்ளிவாய்க்காவலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது எமது மக்கள் மீது பாரிய இனவழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 1,46,679 பேரை பலி யெடுத்துள்ளது. நாம் எமது உறவுகளை இறுதி யக்கத்தில் இழந்து தவிக்கின்றோம்