இளைஞனின் நிர்வாண காணொளி “வட்ஸ் அப்’’ எண்களுக்கு

18 0

வட்ஸ்அப்  மூலம்  தனது வெளிநாட்டு காதலிக்கு ஆபாச காணொளிகளை அனுப்பிய இளைஞனை கடத்திச் சென்று நிர்வாணப்படுத்தி , கொலை மிரட்டல் விடுத்து ,38000 பணத்தை மற்றும் கைத்தொலைபேசியை பெற்றுக்கொண்ட  மூவர்  கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கஹதுடுவ ஸ்ரீ சுமண வீதி மற்றும் பொல்கஸ் ஓவிட்டயை சேர்ந்த 22,24,மற்றும் 28 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட இளைஞனை நிர்வாணமாக்கி  பாலியல் செயல்களுக்கு தூண்டிவிட்டு அதை வீடியோ எடுத்து அவரி்ன் தொலைபேசியில் இருந்த “வாட்ஸ் அப்’’ எண்களுக்கு வீடியோ அனுப்பப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த தாக்கப்பட்ட இளைஞனின் தந்தை, இது தொடர்பில்  பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மற்றும்  கையடக்கத் தொலைபேசிகள் இரண்டு  கைப்பற்றப்பட்டுள்ளன.