நுவரெலியா, லங்கம டிப்போ பாதுகாப்பு உத்தியோகத்தரை கொலை செய்த சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்த நுவரெலியா பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுவரெலியா லங்கம டிப்போவில் காசாளராகப் பணிபுரிந்த ராஜபக்ச (55), அந்தடிப்போவில் சாரதியாகப் பணியாற்றிய பிரேகித் சஞ்சீவ விரசிறி (40) மற்றும் சந்தேகத்திற்குரிய சாரதியான நண்பரான சம்பத் ஜானக பண்டார (36) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
நுவரெலியா டிப்போவில் காவலாளியாக பணியாற்றிய ஏ.லோகநாதன் (85) என்பவரை வௌ்ளிக்கிழமை (06) அதிகாலை 02 மணியளவில் டிப்போவின் பாதுகாப்புச் சாவடி வைத்து கொலைச் செய்துவிட்டு, டிப்போவின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பணத்தை சந்தேகநபர்கள் மூவரும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பேரில், டிப்போவின் காசாளர் தனது டிப்போ காவலாளியைக் கொன்று, டிப்போவில் உள்ள அலமாரியின் அலமாரியில் இருந்த பத்து லட்சத்து ஐம்பத்து ஆயிரத்து நூற்று அறுபத்தேழு ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்