“ஜப்பானை சேர்ந்த பிரபல நடிகையும் பாடகியான மிஹோ நகயாமா [54 வயது] டோக்கியாவில் உள்ள அவரது வீட்டின் குளியல் தொட்டியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நகாயாமா நேற்று [வெள்ளிக்கிழமை] ஒசாகாவில் ஒரு கிறிஸ்துமஸ் கச்சேரியில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்தார்.
ஆனால் நேற்று வேலை நிமித்தமாக அப்பாயிண்ட்மண்ட் இருந்தபோதிலும் இன்னும் அவர் வரவில்லை என்பதால் உடன் வேலை செய்யும் ஒருவர் அவசர எண்ணை அழைத்துள்ளார். அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது குளியலறை தொட்டியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
மருத்துவர்கள் அவரது இறப்பை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து டோக்கியோ போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறப்பின் காரணம் குறித்த மர்மம் வெளிவரும் என்று தெரிகிறது. யார் இந்த மிஹோ நகயாமா? ஜப்பானின் சாகு பகுதியில் பிறந்த நகாயாமா, 1985 ஆம் ஆண்டு ‘மைடோ ஒசவாகசே ஷிமாசு’ என்ற நாடகத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதே ஆண்டில் அவர் தனது முதல் ஜே-பாப் பாடலான \”C\” ஐ வெளியிட்டார். 80 மற்றும் 90களில் ஜே பாப் உச்சத்தில் இருந்தபோது நகாயாமா பாடகியாக பெரும்புகழ் பெற்றார். 1995 ஆம் ஆண்டு அவர் நடித்த ‘லவ் லெட்டர்’ திரைப்படம் நடிகையாக அவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது.
நகயாமா சுமார் 22 ஜே பாப் ஆல்பங்களை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு ‘டோக்கியோ வெதர்’ படமும் பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இசை ஆகியவற்றில் அவர் செய்த சாதனைகளுக்காகப் பல விருதுகளை தனதாக்கியவர் ஆவார்.