வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

14 0

தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுதல் மற்றும் பயணிக்கும் கப்பல்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது டிசம்பர் 11 ஆம் திகதி அளவில் இலங்கை – தமிழ்நாடு கடற்கரையில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பை அடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த கடல் பகுதிகளில் கிலோ மீட்டருக்கு தற்காலிகமாக மிக பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்த அறிவிப்புகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவ மற்றும் கடல் பயணத்தில் ஈடுபடுவோரை கேட்டுக்கொண்டுள்ளது.