இலங்கை அணி 328 ஓட்டங்கள்

13 0

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக பெத்தும் நிஸ்ஸங்க 89 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் Dane Paterson 5 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

அதற்கமைய, தென்னாபிரிக்க அணி தற்போது 30 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.