ஜா-எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜா-எல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி ஒரு கோடி ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்தவுள்ளதாக ஜா-எல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.