14 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் : விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம்

14 0
இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்று, எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கை கடற்பரப்பில் வைத்து  கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை (4) மீன்பிடிக்கச் சென்று வியாழக்கிழமை (5) அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 14 இந்திய மீனவர்கள் இரு படகுகளுடன் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்த நிலையில் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மன்னார் நீதிவான் 14 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.