நேற்றைய தினம் (06) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (07) கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் பதிவு செய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, வியாழக்கிழமை (5) பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அதனையடுத்து, மீண்டும் நேற்றைய தினம் (06) மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தொன்று தொடர்பாக கொள்ளுப்பிட்டியில் வைத்து லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டார்.
இந்நிலையிலேயே இவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.