பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்கில் கைதானவரின் மரண தண்டனைக்கு தடை

318 0

201607280822455367_Prohibition-of-the-death-penalty-in-the-case-of-the_SECVPFபாகிஸ்தானில் அப்துல் கயூம் என்பவருக்கு பயங்கரவாத வழக்கில் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து அவரது தரப்பில் பெஷாவர் ஐகோர்ட்டில் மேல்-முறையீடு செய்யப்பட்டது.இந்த மேல்-முறையீடு வழக்கை நீதிபதிகள் ரூயுல் அமின் கான் சாம்கனி, தாவூத்கான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது அப்துல் கயூம் சார்பில் ஆஜரான வக்கீல் நவீத் அக்தர் வாதிடும்போது, “ எனது கட்சிக்காரர் அப்துல் கயூம் கடந்த 2010-ம் ஆண்டு, மே மாதம் 5-ந் தேதி ஸ்வாட் படையினரால் பிடித்துச்செல்லப்பட்டார். அதன்பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. கடைசியில் அவர் பாதுகாப்பு படையின் காவலில் இருப்பது தெரிய வந்தது. கடந்த காலத்தில் அவர் நிரபராதி என பாதுகாப்பு படையினர் கூறி வந்துள்ளனர். ஆனால் அவருக்கு ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளதாக ஊடகங்கள் மூலமாகத்தான் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அப்துல் கயூமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். இது தொடர்பான வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி ராணுவ அமைச்சகத்துக்கு நோட்டீசு அனுப்பவும் அவர்கள் ஆணையிட்டனர்.