கைது செய்யப்பட்டவர் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
சந்தேக நபர் துபாயிலிருந்து நேற்றைய தினம் பிற்பகல் 04.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 1,520 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.