வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் வவுனியா மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய வவுனியா பண்பாட்டுப் பெருவிழா வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.
வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி. தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் பி. ஏ. சரத் சந்திர பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.