அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யுனைடட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ப்ரையன் தாம்ப்ஸன் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 50. இந்நிலையில் சந்தேக நபரின் சிசிடிவு புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
நியூயார்க் நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ப்ரையன் தாம்ப்ஸன் அங்கிருந்து யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் ப்ரையன் தாம்ப்ஸனின் கழுத்து மற்றும் கால் பகுதியில் துப்பாக்கியால் பலமுறை சுட்டுவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் தாம்ப்ஸன் சரிந்த போதும் அந்த நபர் விடாமல் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கியில் ஒரு கணம் பிரச்சினை ஏற்பட்டபோதும் அதனை சரிசெய்துவிட்டு மீண்டும் அவர் சுடுவதை தொடர்ந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திலும் 9 மி.மீ ரவுண்டுகள் மூன்று சுடப்பட்ட ஷெல்கள், அத்துடன் ஒரு செல்போனையும் போலீஸார் கண்டெடுத்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு நீண்டநாள் திட்டமிட்டப்பட்ட ஒன்று என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
நியூயார்க்கில் உள்ள மவுன்ட் சினாய் வெஸ்ட் மருத்துவமனையில் அவரை உடனடியாக போலீஸார் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாம்ஸனுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததாக அவரது மனைவி பாலெட் தெரிவித்துள்ளார்.
தப்பியோடி சந்தேக நபர் கருப்பு நிற ஹூடி மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தது சிசிடிவி வீடியோக்கள் மூலம் தெரியவந்துள்ளது. கொலையாளியின் புகைப்படத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 2021ஆம் ஆண்டு தாம்ப்சன் ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தாம்சன் ஏப்ரல் 2021 இல் யுனைடெட் ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். 2004 ஆம் ஆண்டு யுனைடெட் ஹெல்த் குழுமத்தில் இணைந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.