மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் ; வருகின்றது ரணிலின் அறிக்கை

19 0

கடந்த அரசாங்கத்தின் போது மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி இந்த வார இறுதியில் விரிவான அறிக்கையை வெளியிட உள்ளது.

உரிய அனுமதிப்பத்திரங்களை வழங்கும் முறை தொடர்பில் அந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட உள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே புதிய ஜனநாயக முன்னணி இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும், பிமல் ரத்நாயக்க கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப் பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்பித்தார்