யாழில் தொடர்ந்து சட்டவிரோத மண் அகழ்வு

28 0

 

யாழ். வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் மண் விநியோகம் இடம்பெற்று வருகின்றது என்று பிரதேச மக்கள் முறைப்பாடளித்துள்ளனர்.

அந்தப் பிரதேச மக்களால் ஏற்கனவே எச்சரிக்கை விடுவிக்கப்பட்ட போதும் இந்தச் சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

இந்தப் பிரதேசத்தில் மண் அகழ்வு மேற்கொண்டு பாரியளவு பள்ளங்கள் வந்துள்ளன எனவும், அதனால் பெருமளவு நீர் தேங்கி நிற்கின்றது எனவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.