கோப் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்

21 0

அரச கணக்கு குழுவின் தலைமை பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என சபை முதல்வரும் அமைச்சருமான தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் உறுப்பினர்களின் கூட்டு எண்ணிக்கை தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு உறுப்பினர்களின் கூட்டு எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கேட்டுவந்த நிலையில், தற்போதுள்ள எண்ணிக்கையில் ஒரு உறுப்பினரை அதிகரிப்பதற்கு இணங்குவதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

என்றாலும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 12 கட்சிகள் இருப்பதால் பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்த எதிர்க்கட்சிக்கு 6 பேருக்கே இடமளிக்கப்பட்டிருக்கிறது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி பிரதமகொறடா உத்தியோகபூர்வமாக அதில் இடம்பெறுகிறது. எஞ்சிய 4 பேரையும் நியமிப்பதிலேயே பிரச்சினை இருப்பதாக எதிர்க்கட்சி பிரதமகொறடா கயந்த கருணாதிலக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதற்கு சபை முதல்வர், அனைத்து கட்சிகளையும் பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அதனால் பாராளுமன்றத்தில் இருக்கும் ஏனைய முக்கியமான குழுக்களுக்கு அவர்களின் பிரதிநிதித்துவத்துக்கு இடமளிக்க முடியும்.

அந்த வகையில் அரச கணக்கு குழுவின் (கோபா) தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு நாங்கள் தீரமானித்திருக்கிறோம். அது நீங்கள் கேட்டு நாங்கள் வழங்கவில்லை. அதனை நாங்கள் நியாயமான முறையிலே வழங்க தீரமானித்திருக்கிறோம். அந்த குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்.