கொழும்பில் ஆபத்தான நிலையில் உள்ள கிரிஷ் கட்டடம் ; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

25 0
கொழும்பு, கோட்டை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள சுமார் 60 மாடிகளைக் கொண்ட கிரிஷ் கட்டடத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டுமான பொருட்களை இரண்டு வாரங்களுக்குள் அகற்றுமாறு கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று வெள்ளிக்கிழமை (06) உத்தரவிட்டுள்ளார்.

கிரிஷ் கட்டடம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் கட்டடத்தில் உள்ள கட்டுமான பொருட்களை அகற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கட்டடத்தில் உள்ள கட்டுமான பொருட்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும்போது பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு செயற்படுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.