பொதுமக்கள் மருத்துவர்கள் போன்று உடையணிந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மேற்குகரையில் உள்ள மருத்துவமனைக்குள் நுழைந்து பாலஸ்தீன போராளியொருவரை கடத்தி சென்றுள்ளனர் என சின்என்என் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு நாட்களிற்கு முன்னர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலஸ்தீன போராளி உறுப்பினர் ஒருவரையே இஸ்ரேலிய படையினர் கடத்திசென்றுள்ளனர்.
மருத்துவர்கள் தாதிமார்கள் சாதாரண பாலஸ்தீனிய பெண்கள் போன்று உடையணிந்து வந்த 20க்கும்அதிகமான இஸ்ரேலின் இரகசிய விசேட படைப்பிரிவினர் அவரை கடத்தி சென்றனர் ஆறு நிமிடங்களில் அந்த நடவடிக்கை முடிவடைந்துவிட்டது என பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவமனை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை இடம்பெற்றவேளை அங்கிருந்தவர்கள் எடுத்துள்ள வீடியோக்கள் மருத்துவர் போன்று உடையணிந்த ஒருவர் அந்த நபரை உறுப்பினரை சக்கரநாற்காலியில் நேபிலஸ் மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு சென்று இலக்கத்தகடற்ற வாகனத்தில் ஏற்றுவதை காண்பித்துள்ளன.
போராளியொருவரை கொலை செய்ய முயற்சி செய்த பின்னர் பாதுகாப்பு படையினர் துல்லியமாக செயற்பட்டு நேப்பிளஸ் மருத்துவமனையில் அவரை கைதுசெய்தனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் அய்மன் கனாம் ,இவர் மேற்குகரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பங்கேற்றிருந்தார் அந்த தாக்குதலில் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டார் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.