கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் தவறான முடிவெடுத்த குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (05.12.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், முழுமையான விசாரணைக்காக அவர் பரிந்துரைத்துள்ளார்.