யாழ்ப்பாணத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(4) ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது தாலிக்கொடி உட்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் களவாடப்பட்டிருந்தது.
வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருந்தவேளை, மதியம் வீட்டின் கூரையை பிரித்து இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.