தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தை எதிர்பார்க்காமல் ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த சென்னை – திருச்சி சாலையை தமிழக அரசே விரைந்து சீரமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விசிக சட்டப் பேரவை குழுத் தலைவருமான சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக நேற்று அவர் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஃபெஞ்சல் புயலில் விழுப்புரம், கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசா யிகள், சிறு, குறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலுக்கு 15 பேர் இதுவரை உயிரிழந்தி ருப்பது வேதனை அளிக்கிறது.
தமிழக அரசு பல்வேறு நடவ டிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்க ளின் கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்குவதற்கு இடம், குடிநீர், 3 வேலையும் உணவு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்க வேண்டும்.
மேலும் வெள்ளத்தில் கழிவுகள் அடித்துவரப்பட்டு துர்நாற் றம் வீசப்படுவதால் அந்தப் பகுதிகளில் போர்க்கால அடிப்படை யில் தூய்மைப் பணிகளை மேற் கொள்ள வேண்டும். குறிப்பாக எஸ்சி, எஸ்டி, மீனவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப் படையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள், கால்நடை உயிரி ழப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் வரவேற்கத்தக்கது. ஆனால் பல கிராமங்களில் வீட்டு உபயோகப் பொருட்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டதை கணக்கெடுப்பு நடத்தி அதற்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
சிறு, குறுதொாழில், பட்டறைகள் பாாதிக் கப்பட்ட நிலையில் 50 சதவீதம் மானியத்துடன் வட்டியில்லா கடனுதவியினை கணக்கெடுப்பு நடத்தி வழங்க வேண்டும். அதேபோல், விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்விக்கட்ட ணத்தை இந்த ஓராண்டு மட்டுமே அரசே ஏற்க வேண்டும்.
சென்னை – திருச்சி, கும்பகோணம் தேசிய நெடுஞ் சாலைகள் சேதமடைந்ததால் அதிகவேமாக வரும்வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுகிறது. தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தை எதிர் பார்க்காமல் இந்தச் சாலைகளை தமிழக அரசே சீரமைக்க வேண்டும். பல இடங்களில் ஏரிகள் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியுள்ளது. இன்னும் 2 மாதங்களில் வறட்சி ஏற்படும்.
அப்போது குடிநீருக்கும் தட்டுபாடு ஏற்படும். எனவே தமிழக அரசு நீர்மேலாண்மைத் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் புயல் பாதிப்பு குறித்து பேசுவதற்குக்கூட தமிழக எம்.பிக்களுக்கு வாய்ப்பு வழங்காமல் அவர்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கோரிக் கையை ஏற்று உடனடியாக அவர்கள் கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். முதல்வர் பல்வேறு நெருக் கடியிலும் அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி புயல் நிவாரண மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 48 மணிநேரத்தில் இயல்புநிலை திரும்பி, சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. பலஇடங்களில் சிக்கல் இருக்கலாம். அவைகள் அந்தப்பகுதி சூழ்நிலைக்கேற்ப சீரமைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தாார்.