உலகம் மூன்றாவது அணுவாயுத யுகத்தின் விளிம்பில் – பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை

12 0

உலகம் அணுவாயுத யுகத்தின் விளிம்பில் உள்ளதாக பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் மாற்றமடைந்துவிட்டது,என தெரிவித்துள்ள அட்மிரல் சேர் டொனி ரடக்கின் உலகளாவிய சக்தி மாறுகின்றது,மூன்றாவது அணுசக்தி யுகத்தை எதிர்கொள்கி;ன்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யுகம் அதற்கு முந்தைய அணுசக்தியுகத்தை விட சிக்கலானது என தெரிவித்துள்ள பிரிட்டனின் ஆயுதப்படைகளின் தளபதி இந்த யுகத்தின் முதலாவது பனிப்போர்,இரண்டாவது யுகத்தில் ஆயுதகளைவு முயற்சிகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஸ்யாவின் யுத்தமும் மத்தியகிழக்கின் பல்வேறு யுத்தங்களும்,உலகின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுடனான ரஸ்ய  எல்லையில் வடகொரிய படையினர் நிறுத்தப்பட்டுள்ளமையே இந்த வருடத்தின் முற்றிலும் வழமைக்குமாறான சம்பவம் என அட்மிரல் சேர் டொனி ரடக்கின் தெரிவித்துள்ளார்.