பிரிட்டன் சென்றடைந்தமை குறித்து டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கை தமிழர்கள் நிம்மதி பெரூ மூச்சு

30 0
image
மூன்று வருடகாலமாக டியாகோகார்சியாவில் தீவில் சிக்குண்டிருந்தஇலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டன் சென்றடைய முடிந்துள்ளமை  குறித்து நிம்மதி வெளியிட்டுள்ளனர்.

இது குறித்துகார்டியன் தெரிவித்துள்ளதாவது

இந்துசமுத்திரத்தின் தொலைதூரதீவான டியாகோ கார்சியாவில் மிகமோசமான நிலையில்  சிக்குண்டிருந்தவர்கள் பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துள்ள நிலையில் தங்கள் பயணம் முடிவிற்கு வந்துள்ளமை குறித்து நிம்மதி வெளியிட்டுள்ளனர்.

47 இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை இரவு பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துள்ளதை சட்டத்தரணிகளும் அவர்களிற்காக குரல் கொடுத்தவர்களும் நீதிக்கான பெரும் தினம்  என வரவேற்றுள்ளனர். இதேவேளை ருவாண்டாவிலிருந்து மேலும் எட்டு பேர் பிரிட்டன் வந்து சேர்ந்துள்ளனர்.இவர்களும் இலங்கை தமிழர்கள் இவர்களை அதிகாரிகள் மருத்துவசிகிச்சைக்காக ருவாண்டா  அனுப்பியிருந்தனர்.

லண்டனிற்கு வந்து சேர்ந்தவர்களில் 12 சிறுவர்களும் உள்;ளனர்.

இவர்கள் தற்போது லண்டனின் புறநகர் பகுதியில்  உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.சிறுவர்கள் உற்சாகத்துடன் ஒடித்திரிவதை அவதானிக்க முடிகின்றது.

கடும் குளிர் முற்றிலும் பழக்கமில்லாத சூழ்நிலைகளில் இருந்து விடுபட்டமை குறித்து அவர்கள் நிம்மதியடைந்துள்ளதை உணரமுடிகின்றது.

நாங்கள் பிரிட்டனிற்கு வந்துசேர்ந்துவிட்டோம் என்பதை நம்பமுடியாமல் உள்ளது ,சொக்கத்தை அடைந்துள்ளது போல உணர்கின்றோம் என ஒருவர் தெரிவி;த்தார்.

கனடாவில் புகலிடம் பெறும்நோக்கில் இவர்கள் பயணித்த படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்ததால் இவர்கள் டியாகோகார்சியாவில் சிக்குண்டனர்.

எங்கள் நாட்டில் வாழ்க்கை நன்றாகயிருந்திருந்தால் நாங்கள் ஒழுகும் படகில்சமுத்திரங்கள் ஊடாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருக்கமாட்டோம்  என மற்றுமொரு இலங்கை தமிழர் தெரிவித்தார்.

நாங்கள் அனைவரும் கடலில் உயிரிழந்துவிடுவோம் என நான் நினைத்தேன் ,ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்கு முயல்வதா அல்லது அனைவரும் கடலில் மடிவதா சிறந்தது என  என்னை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேன்.

இலங்கை தமிழ் குடியேற்றவாசிகள் டியாகோகார்சியா தீவை சென்றடைந்ததை பிரிட்டனின் உள்துறை அமைச்சர்கள் ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக கருதினார்கள்.

இவர்களின் தலைவிதி குறித்து நீண்ட சட்டப்போராட்டங்கள் இடம்பெற்றன.தமிழர்கள் அந்த தீவில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக சட்டத்தரணிகள் அந்த தீவிற்கு சென்றுவந்தனர்.

அந்த தீவில் மூன்றுநாட்கள் தான் தங்கியிருப்போம் என நினைத்தோம் ஆனால் மூன்றுவருடங்கள் தங்கியிருக்க நேர்ந்தது என பெண்ஒருவர் தெரிவித்தார்.