மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனை இன்று (06) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான யோசனை இன்று வழங்கப்படவுள்ளதாக அத தெரண வினவிய போது அதன் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தின் போது மின் கட்டணத்தை வருடத்திற்கு நான்கு முறை திருத்தியமைக்க வேண்டும் என முன்மொழியப்பட்டது.
ஆனால் 2023ல் மூன்று முறையும், இந்த ஆண்டு இரண்டு முறையும் மின் கட்டணம் திருத்தப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் வருடத்திற்கு இரண்டு முறை மின் கட்டணத்தை திருத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த வருடத்தின் முதல் 6 மாதங்களுக்கான கட்டண திருத்தம் இன்றைய யோசனையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.