வருமானம், செலவு அறிக்கை சமர்பிப்பதற்கான காலக்கெடு நிறைவு

9 0

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (6) நள்ளிரவுடன் முடிவடைகிறது.

இவற்றில் கிட்டத்தட்ட 20% அறிக்கைகள் ஏற்கெனவே மாவட்ட மட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது அறிக்கைகளை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.

“ தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினால், தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

“இந்த காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்று  தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது