யேர்மனியில் மருத்துவமனை ஊழியர் குறுக்கு வில்லால் கொல்லப்பட்டார்

24 0

யேர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள Bad Zwesten மருத்துவமனை ஒன்றில் புகுந்த நபர் குறுக்கு வில் கொண்டு தாக்கியதில் பெண் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார் என இன்று வியாழக்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் 50 வயது மதிக்கத்தக்கவர். முதலில் அவர் படுகாயமடைந்தார். அவர் ஹெஸ்ஸி மாநிலத்தில் உள்ள பேட் ஸ்வெஸ்டனில் உள்ள மருத்துவமனையில் அவசர மருத்துவ உதவி சிகிற்சையில் இருந்து போது சிகிற்சை பலனின்றி இறந்தார்.

இத்தாக்குதலானது நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் நடந்தது. தாக்குதலாளி தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். எனினும் தாக்குதல் நடத்தியவர் பஸ்ஸௌ மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பெயரைப் காவல்துறையினர் குறிப்பிடவில்லை அல்லது தாக்குதலுக்கான நோக்கம் குறித்து எந்த தகவலையும் காவல்துறை தெரிவிக்கவில்லை. இருப்பினும், அவர் பாதுகாப்புக் காவலில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை காவலில் வைக்க பொறுப்பு மாவட்ட நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கப்படும் என்று காசல் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.