நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த பென்சிலை எடுக்க இறங்கிய மூன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் பருத்தித்துறை – திருமால்புரம், வல்லிபுரம் பகுதியில் 05 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதில் ரஜீவன் சுஜீ என்கின்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த குழந்தை தனது கையில் பென்சில் ஒன்றுடன் சென்றுகொண்டிருந்தபோது பென்சில் தவறி நீர்தேக்கத்தில் வீழ்ந்துள்ளது.
அதனை எடுப்பதற்காக குறித்த நீர்த் தேக்கத்தில் இறங்கிய வேளை குழந்தை நீரில் மூழ்கியது. குழந்தையை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை குழந்தை ஏற்கனவே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.