அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா ?

45 0

கடந்த அரசாங்கத்தில்  அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட 361 மதுபானசாலை அனுமதிகளின் உரிமையாளர்கள், சிபார்சு செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமா, வழங்கப்பட்ட  அனுமதி பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா   என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர்   இரா. சாணக்கியன் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05)  நடைபெற்ற  அமர்வின் போது  ஒழுங்குப்பிரச்சினை    முன்வைத்து  மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கடந்த அரசாங்கத்தால்  அரசியல்    இலஞ்சமாக   மதுபானசாலைகளுக்கான அனுமதிகளை பெற்றவர்களின் விபரங்களை அரசாங்கம்  சபையில் சமர்ப்பித்தமை பாராட்டுக்குரியது.

அதேவேளை இந்த மதுபானசாலைகளின் உரிமையாளர்கள்,  இவற்றுக்கான அனுமதிகளுக்கு  சிபார்சு செய்தவர்கள் தொடர்பில் அரசு விசாரணை நடத்துமா? அத்துடன் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட இந்த மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை அரசாங்கம்  இரத்துச் செய்யுமா ,

இந்த 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் தொடர்பில் அரசாங்கம்  ஏனெனில்  பொதுமக்கள் எம்மிடம் இவ்விடயம் குறித்து வினவுகிறார்கள்  ஆகவே  அரசாங்கம்  அடுத்தக்கட்ட  நடவடிக்கை குறித்து  விளக்கமளிக்க வேண்டும் என சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவிடம் கோரினார். எனினும் அரச  தரப்பில்  இருந்து   எவரும் பதிலளிக்கவில்லை.