இலங்கையில் உள்ள சீன கலாசார மையம் “சீன உணவு திருவிழாவை” பிரமாண்டமாக நடத்தியது.
இந்த நிகழ்வு நேற்று புதன்கிழமை (04) மாலை நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் H.E. Qi Zhenhong, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி.அத்தபத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
கலாசாரம் மற்றும் சுற்றுலாவை அதன் கருப்பொருளாக கொண்ட இந்த நிகழ்வில் இலங்கையின் அனைத்து தரப்பு மக்களும் இராஜதந்திரத் தூதரகங்களின் பணியாளர்கள் மற்றும் சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 200 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.