இந்த காட்டு யானை கூட்டம் நேற்று புதன்கிழமை (4) காலை சிராவஸ்திபுர பிரதேசத்தில் உள்ள பெருமளவிலான பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.
இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில் ,
இந்த காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக திரிவதால் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்து வருவதுடன், அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த கிராமங்களில் வாழும் மக்கள் இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தாலும்,இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வேலிகளை அமைத்து விரைவில் காப்பு கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.