ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் முதலாவது வாக்குப் பதிவு கணக்கு சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவினால் வியாழக்கிழமை (05) சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரச சேவைகளை கொண்டுசெல்வதற்கு அவசியமான நிதி இந்த வாக்குப் பதிவு கணக்கு ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசினால் 2025 ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி வரையான 4 மாத காலப் பகுதிக்கான வாக்கு பதிவு கணக்காக 9,60,500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குக் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
அதன் பிரகாரம், இந்த வாக்குப் பதிவு கணக்கில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கென 20801 கோடியே 95,75000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கணக்கு வாக்குப் பதிவு சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டு முதல் நாள் விவாதம் இன்று இடம்பெற்ற நிலையில் நாளை வெள்ளிக்கிழமை (06) இரண்டாம் நாள் விவாதம் இடம்பெறவுள்ளது.