யாழ்ப்பாணம் ( வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி அன்று கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் நேற்று (04) பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கடந்த 01ஆம் திகதி (01.12.2024) அன்று கைது செய்யப்பட்டு 2ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்ட நிலையில் இன்றுவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
எனினும், நேற்று மீண்டும் வழக்கு இடம்பெற்ற நிலையில் குறித்த வழக்கிற்கு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றிற்கு முன்வைத்த விவாதத்தின் அடிப்படையில் குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.