யாழில் பாம்பு தீண்டி முதியவர் உயிரிழப்பு

19 0

யாழ்  வடமராட்சியில் மாட்டை மேய்ச்சலுக்குக் கட்டச் சென்ற முதியவர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஓய்வுநிலை உத்தியோகத்தரான இளையதம்பி சிவகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.மேற்படி நபர் உடுப்பிட்டிப் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாட்டை மேய்ச்சலுக்குக் கட்டச் சென்ற வேளை பாம்பு தீண்டியுள்ளது.அதையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.