மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகனம் மோதி விபத்து; இளைஞன் பலி, நண்பன் காயம்

18 0

களுத்துறை, மொரந்துடுவ தெல்கட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு இடம்பெற்றுள்ளது.

மொரந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த உதயங்க சில்வா என்ற 18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் தனது 17 வயது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் இளைஞனின் நண்பன் படுகாயமடைந்து களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 25 வயதுடைய டிப்பர் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரந்துடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.