2022ஆம் ஆண்டு நடைபெற்ற மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பில் பருத்தித்துறை முன்னாள் நகரசபை உறுப்பினர் ஒருவரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவரும் பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான ப.சுரேஷிடமே நேற்று (03) நான்கு மணித்தியாலங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.