அவர் மேலும் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக டெங்கு தொற்று தீவிரமாகி வருகின்றது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 5 ஆயிரத்து 453 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செப்டெம்பர் மாதம் 42 பேரும், ஒக்டோபர் மாதம் 69 பேரும், நவம்பர் மாதம் 134 பேரும் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் நாளுக்கு நாள் டெங்கு தொற்று மிகவும் ஆபத்தானதாக மாறி வருகின்றமை தெளிவாகிறது.
யாழ்ப்பாணம், கோப்பாய், கரவெட்டி, பருத்தித்துறை, சண்டிலிப்பாய், சங்கானை, சாவகச்சேரி ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் டெங்குத் தொற்று பரவி வருகிறது.
குறிப்பாக, யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட கொழும்புத் துறையிலும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட உரும்பிராயிலும் டெங்குத் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது என்றார்.