வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி !

15 0

வெலிக்கடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

பண்டாரகமை, கஹம்பிலியாவத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சுமித் குமார என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது மகனுடன் இணைந்து வீட்டின் மதிலில் இருந்த பழைய இரும்பு வேலியை அகற்றி புதிய இரும்பு வேலியை அமைத்து கொண்டிருந்துள்ளார்.

இதன்போது உயிரிழந்தவரின் மகன் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ள நிலையில், இவர் தனியாக இரும்பு வேலியை அமைத்து கொண்டிருந்த போது மதில் இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.