வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீடிப்பதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 2023 – 2024 ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கு நவம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறிருப்பினும், சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அந்த கால அவகாசத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோர் புதிய காலக்கெடுவுக்குள் அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பித்தால் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளமாட்டார்கள் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.