யாழ்ப்பாணம்-குருநகர் கடற்பகுதியில் இன்று (4) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 188 கிலோ 350 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த படகில் காணப்பட்ட 7 பயணப் பொதிகளில் இந்த கேரள கஞ்சா கையிருப்பு இருந்ததாகவும், அதன் பெறுமதி 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு மேலதிக சட்ட மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.