பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; உப பொலிஸ் பரிசோதகர் கைது !

12 0

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம், உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்  கடந்த ஆகஸ்ட் மாதம்  16 ஆம் திகதி ஸ்ரீ மஹா போதி விகாரையில் கடமையில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில் அதன் மேற்பார்வையாளராக சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் செயற்பட்டுள்ளார்.

இதன்பாது, சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் இந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.