அளுத்கம – மத்துகம வீதியில் வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கொங்கிரீட் கல் மீது மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காரின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.