நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு

19 0

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்திருப்பதாக மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையிலே கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது