பாதுகாப்புச் சுவரின் பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

23 0

வீடொன்றைச் சுற்றி கட்டப்பட்டிருந்த பாதுகாப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பூச்சு பூசுபவர் (painter) உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பண்டாரகம ரைகம கஹம்பிலியவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சுமித் குமார என்ற நபரே அவருடைய பிறந்த நாளான கடந்த 2ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் தனது மகனுடன் இணைந்து வெலிக்கடை ஸ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற வீதியில் உள்ள வீடொன்றின் முன்பக்க சுவரில் இருந்த பழைய இரும்பு வேலியை அகற்றி புதிய இரும்பு வேலியை அமைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் மகன் அருகில் உள்ள கடைக்கு சென்ற போது, ​​ பாதுகாப்புச் சுவரில் மீதி இருந்ததை இடித்து கொண்டிருந்த போது, ​​அது அதே நேரத்தில் அவரது உடலில் சரிந்து விழுந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.