மாவீரர் விவகாரம்: இளைஞனுக்கு பிணை

17 0

தமிழீழ மாவீரர் தினத்தை முன்னிட்டு தனது முகநூல் பக்கத்தில் பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் திலின கமகே, புதன்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பொது ஒழுங்கை மீறும் வகையிலும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் செய்திகள் பரப்பப்பட்டமைக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரின் இணைய ஊடுருவல் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து,  முன்வைக்கப்பட்ட உண்மைகளை ஆராய்ந்த நீதவான் பிணை வழங்கியுள்ளார்