தென்பெண்ணை வெள்ளைப் பெருக்கு பாதிப்பின் நிலவரம் என்ன?

39 0

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் குடியிருப்பில் சூழ்ந்த வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. அதேவேளை யில் கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் பல கிராமங்களில் பாதிப்பு நீடித்து வருகிறது.

சாத்தனூர் அணையில் நேற்று முன்தினம் விநாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடலூர் தென்பெண் ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாழங்குடா, குண்டு உப்பலவாடி, பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்கணாங்குப்பம், திடீர்குப்பம், எம்ஜிஆர் நகர், செம்மண்டலம், வெளிச் சமண்டலம், உண்ணாமலை செட்டிச்சாவடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.

வெள்ள நீரில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, போலீஸார், தன்னார்வலர்கள் மீட்டு பாது காப்பு மையங்களில் தங்க வைத் தனர். இந்நிலையில் நேற்று தென் பெண்ணையாற்றில் நீர்வரத்து குறைந்து, விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து, கடலூர், நெல்லிக் குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூழ்ந்த வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. கடலூர் – புதுச்சேரி சாலையில் முள்ளோடை பகுதியில் வெள்ளநீர் சாலையை கடந்து செல்வதால் புதுச்சேரி- கடலூர் சாலைப் போக்குவரத்து கடந்த 2 நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ளது.

கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடி பகுதியில் வெள்ள நீர் வடியும் நகர் பகுதிகளில் சிறுவர்கள் மீன்பிடித்து விளையாடி வருகின் றனர். கடலூர் மாவட்டத்தில் தென் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று முன்தினம் மதியம் வரை 3,421 குடும்பங்களைச் சேர்ந்த 5,444 ஆண்களும், 6,306 பெண்களும், 863 குழந்தைகள் என மொத்தம் 12,613 நபர்கள் மீட்கப்பட்டு 33 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

23,638 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.வெள்ளம் குறைந்த நிலையில் கடலூர் தென்பெண்ணை ஆறு.கடலூர் – புதுச்சேரி சாலையில் முள்ளோடை பகுதியில் சாலையில் வழிந்தோடும் வெள்ளநீர்.கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடி பகுதியில் வெள்ளநீர் வடியும் நிலையில் சிறுவர்கள் மீன்பிடித்து விளையாடினர்.

வெள்ளம் குறைந்த நிலையில் கடலூர் தென்பெண்ணை ஆறு.

கடுமையான பாதிப்பில் திருவெண்ணெய்நல்லூர், பண்ருட்டி: தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதியான திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பண்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. சாத்தனூர் அணை திறப்பால் நேற்று முன்தினம் தென்பெண்ணை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தென்பெண்ணையாற்றின் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட கரையோர கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

இதில் தென்பெண்ணையாற்றில் திருக்கோவிலூர் அணைக்கட்டுப் பகுதியில் இருந்து மலட்டாறு பிரிகிறது. இந்த மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அரசூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டது. மலட்டாற்றுப் பாதையான திருவெண்ணெய்நல்லூரில் வெள்ளநீர் புகுந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டு, திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் சுற்றுச்சுவர் முற்றிலும் விழுந்தது.

கடலூர் – புதுச்சேரி சாலையில் முள்ளோடை பகுதியில்
சாலையில் வழிந்தோடும் வெள்ளநீர்.

திருவெண்ணெய் நல்லூர் – விழுப்புரம் சாலை துண்டிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளத்தால் பலரது வீடுகளின் சுவர் இடிந்து சேதமானது. குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமாகின. விளைநிலங்களை மண்மூடி பயிர்கள் சேதமடைந்துள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போன் கோபுரங்களும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட ராசாப்பாளையம், ஏரிப் பாளையம், கட்ட குச்சிப்பாளையம், திருத்துறையூர், வரிஞ்சிப்பாக்கம், பெரிய கள்ளிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களிலும் வெள்ளநீர் புகுந்ததில் விளை நிலங்களிலும், சாலைகளிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.மலட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட விழுப்புரம் – திருவெண்ணெய்நல்லூர் சாலை.திருவெண்ணெய்நல்லூர் குடியிருப்பு முன்பு நிறுத்தப்பட்ட சரக்கு வாகனம் மணலில் புதைந்துள்ளது.

கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடி பகுதியில் வெள்ளநீர் வடியும்
நிலையில் சிறுவர்கள் மீன்பிடித்து விளையாடினர்.

புதுச்சேரி கிராமங்களில் 2-வது நாளாக மக்கள் தவிப்பு: புதுச்சேரி அருகே நேற்று 2-வது நாளாக பல கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் பல சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது. தென்பெண்ணை வெள்ளப் பெருக்கு காரணமாக, புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே அழகிநத்தம் தரைப்பாலம், சித்தேரி அணைக்கட்டு, கொம்மன் நாத்மேடு தடுப்பணைகளில் வெள்ளம் கரைபுரண்டு, பல கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

இந்த திடீர் வெள்ளத்தால் சோரியாங்குப்பம், ஆராய்ச்சிக்குப்பம், பாகூர், இருளன்சந்தை, கொம்மந்தான் மேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அந்தப் பகுதிகளில் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று 2-வது நாளாக பல கிராமங்களில் தொடர்ந்து வெள்ளநீர் வெளியேறாமல் அதிகரித்தது.

புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவிகளை
வெள்ளத்தில் இருந்து மீட்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்.

தண்ணீர் குறைந்த பகுதிகளில் மட்டும் நிவாரண முகாம்களில் இருந்து மக்கள் வெளியேறி வீடுகளுக்கு சென்றனர். மேலும் சேலியமேடு, அரங்கனூர், குமாரமங்கலம் பகுதி வரை வெள்ளநீர் வயலில் புகுந்து பாகூர் – கரிக்கலாம்பாக்கம் சாலையை கடந்து ஆறு போல ஓடுகிறது. பாகூர் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் அந்தப் பகுதியில் உள்ள ஓடை மற்றும் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் டி.என்.பாளையம், மேல்அழிஞ்சபட்டு, கரிக்கன்நகர், ரெட்டிச்சாவடி பகுதிகளில் உள்ள நிலத்திலும், வீடுகளிலும் நேற்று காலை முதல் வெள்ளநீர் புகுந்து கடலூர்-புதுச்சேரி சாலை வழியாக கடந்து செல்கிறது.

பாகூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் சித்தேரி, மணப்பட்டு, காட்டுக்குப்பம் ஏரி வழியாகவும் பிரிந்து, முள்ளோடை பகுதியில் சாலையோர வாய்க்கால் வழியாக வழிந்தோடி கடலூர்-புதுச்சேரி சாலையை கடந்து செல்கிறது. இச்சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும் முள்ளோடை, பரிக்கல்பட்டு, மதிகிருஷ் ணாபுரம், கன்னியகோயில், பள்ளக்கொரவள்ளிமேடு ஆகிய பகுதிகளில் பல வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் கடலூர் – புதுச்சேரி வழித்தடத்தில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

நோணாங்குப்பம் படகு குழாமில் சில படகுகள் வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீதமுள்ள படகுகளை கயிறு கட்டி
காப்பாற்றும் பணியாளர்கள். | படம்: செ.ஞானபிரகாஷ் |

முள்ளோடை பகுதியில் உள்ள தானியங்கி துணை மின்நிலையத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் மின்சாரம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதேபோல் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இருக்கும் ஓடை மற்றும் தனியார் பொறியியல் கல்லூரியை ஒட்டிய நீர்வரத்து வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி வழிவதால் அந்த பகுதிகளிலும், ரெட்டிச்சாவடி காவல் நிலையம் அருகே கடலூர்-புதுச்சேரி சாலையின் குறுக்கேயும் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும் அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்ததால், குறிப்பிட்ட சில நோயாளிகள் அங்கிருந்து பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். இதேபோல் அங்குள்ள கல்லூரி விடுதிகளில் சிக்கிய மருத்துவ மாணவர்கள் மீட்கப்பட்டனர். இதேபோல் அங்கனூர்-கீழ் குமாரமங்கலம் செல்லும் சாலையில் தண்ணீர் ஓடுவதால் அச்சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல இடங்களிலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

புதுச்சேரி அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் அந்தந்த பகுதி எம்எல்ஏக்கள், இளைஞர்கள் உதவிகளை செய்தாலும், இன்னும் பல மக்களுக்கு உதவிகள் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால், நிவாரண முகாம்களில் ஆயிரம் பேர் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தன்று நள்ளிரவு தூங்கி கொண்டிருக்கும் போது மழை வெள்ளம் வந்ததை, தாங்கள் வளர்த்த நாய்கள் குரைத்து தங்களுக்கு எச்சரிக்கை விடுத்து காப்பாற்றியதாக முகாமில் இருந்த சிலர் உருக்கமாக கூறினர்.

மலட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட விழுப்புரம் –
திருவெண்ணெய்நல்லூர் சாலை.

பல கிராமங்களில் குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். சேலியமேடு உள்ளிட்ட இடங்களில் டிராக்டர் டேங்க் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சோரியாங் குப்பம் அரசுப் பள்ளியில் உள்ள முகாமில் சிலர் தங்களது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கட்டி வைத்து அவற்றை பராமரித்து வருகின்றனர். இப்பள்ளி திறக்கப்பட உள்ளதால் அங்கு கட்டிவைக்கப்பட்டுள்ள கால்நடைகளை வெளியேற்றும்படி அதிகாரிகள் கூறுவதாக கால்நடைவளர்ப்போர் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவெண்ணெய்நல்லூர் குடியிருப்பு முன்பு நிறுத்தப்பட்ட
சரக்கு வாகனம் மணலில் புதைந்துள்ளது.

வெள்ளத்தால் தத்தளிக்கும் பாகூர்: தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாகூர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சோரியாங் குப்பம், குருவிநத்தம், இருளன் சந்தை, பாகூர் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் ஆற்றுநீர் உட்புகுந்து மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. கடந்த 2021–ம் ஆண்டு தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை விட தற்போதைய வெள்ளப்பெருக்கு மூன்று மடங்கு அதிகம். இதனால் பாதிப்பும் அதிகமாக உள்ளதாக பாகூர் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட பாகூர் பகுதிகளை புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தொகுதி எம்எல்ஏ திமுக மாநில பொருளாளர் செந்தில்குமார், திமுக துணை அமைப்பாளர், உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பூ.மூர்த்தி ஆகியோர் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது வெள்ளத்தில் தத்தளித்த மக்களை படகு மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்ததாக திமுத தரப்பில் தெரிவித்தனர்.

பாகூரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும்
எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட திமுகவினர்.

இதைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள், பாகூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது, இரவு நேரத்தில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் அதிகரித்தால் மக்களை எப்படி பாதுகாப்பது, தொடர்ந்து ஆற்று வெள்ளத்தை கண்காணிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.பாகூரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட திமுகவினர்.

அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடம் மழை
வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவது குறைந்தது: சாத்தனூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. அணைக்கு நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி விநாடிக்கு வரும் 22,500 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 118 அடியாக உள்ளது. அணையில் 7,079 மில்லியன் கனஅடி உள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததால், 4 மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தென்பெண்ணையாறு கரை யோரங்களில் உள்ள கிராமங்களில் வெள்ளநீர் வடிந்து வருகிறது.