வவுனியாவில் சுகவீனமடைந்திருந்த யானை சிகிச்சை பலனின்றி மரணம்

16 0

வவுனியாவில் சுகவீனமடைந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானை இன்றையதினம் மரணமடைந்ததாக வவுனியா மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

வவுனியா குடாகச்சக்கொடி வயல் வெளியில் சுகயீனம் காரணமாக வீழ்ந்து கிடந்த யானையினை வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேய குறித்த யானை மரணமடைந்துள்ளது.

இதேவேளை குறித்த யானையின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை  மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.