துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞன் காயம் !

15 0

குருணாகல், பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுனகொலே பகுதியில் நேற்று திங்கட்கிழமை (02) துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் குருணாகல், மொரகொல்லாகம  பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார்.

காயமடைந்த  இளைஞன் நேற்றைய தினம் மாலை வனப்பகுதி ஒன்றிற்கு சென்ற போது இனந்தெரியாத நபரொருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து காயமடைந்தவர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூட்டை நடத்திய சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.