பிரான்சு லியோன் நகரில் இடம்பெற்ற மாவீரர் நாள் – 2024

41 0

உலகம் முழுதும் வாழும் தமிழர்களால் நினைவுகூரப்படும் கார்த்திகை 27 அன்று லியோன் வாழ் தமிழர்களும் 27/11/2024 புதன்கிழமை மாலை லியோன் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மாலை 17.00 மணிக்கு மக்களின் வரவேற்புடன் ஆரம்பித்து 18:05 மணிக்கு அகவணக்கம் செலுத்தி கொடியேற்ற பாடலுடன் ஆரம்பமாகி, ஈழவிடுதலைப் போராட்டத்தின் முதல்களப்பலியான லெப்டினட் சங்கர் சத்தியநாதனின் நினைவுகளுடன் பொதுச்சுடரினை லெப்டினட் பூஞ்சுடர் (கிருஷ்ணமூர்த்தி கிருஸ்ணி) அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார். தாயக கனவுடன் சாவினை தழுவிய….. பாடல் ஒலிக்க மக்கள் உணர்வுபூர்வமாக தங்கள் உறவுகளை நினைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
ஈகச் சுடரினை கப்டன் சிதம்பரன் (யானகிராமன் கைலைவாசன்) அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார் .
அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவினர்கள் ,பொதுமக்கள், சுடர்களை ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்கள். திரையில் தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் உரை நிகழ்வும். இளையோர் அமைப்பு பிரதிநிதி செல்வி திவ்வியா அவர்களின் உரையும்,தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் மாவீரர் நினைவுசுமந்த நிகழ்வுகளும் சிறப்பிக்க, மாவீர்ர்களின் பெற்றோர், உரித்துடையோர், மதிப்பளிக்கப்பட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

மாவீரர் நாள் சிறப்பு வெளியீடுகளை மக்கள் விரும்பி வாங்கியதை காணக்கூடியதாக இருந்தது. சிறப்புரையாக பிராங்கோ லியோன் தமிழ்ச் சங்கத் தலைவர் டேவிட் ஸ்ரெலின் வழங்கியதுடன், நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.
இந் நிகழ்வுகள் யாவற்றையும் லியோன் வாழ் இளையோர் செல்வி தனுத்திகா விக்னேஸ்வரன் மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.